Kushboo
பிரபல நடிகையின் மகளுடன் சேர்ந்து தர்பார் படம் பார்த்து ரசித்துள்ளார் நடிகை குஷ்பூ.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த தர்பார் திரைப்படம் நேற்று திரைக்கு வந்தது. இந்த படத்தை சாதாரண ரசிகர்களை போலவே திரையுலக பிரபலங்களும் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக தலைவர் 168 படத்தில் நடித்து வரும் குஷ்பூ நடிகை மீனா மற்றும் அவருடைய மகள் நைனிகாவுடன் சேர்ந்து படம் பார்த்துள்ளார்.

அந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டுள்ளார், மேலும் ரஜினி காந்தம் போல படம் முழுவதும் கவர்ந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.