விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்..
‘கிங்டம்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அப்டேட் பார்ப்போம்..
விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் புதிய அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான பாடலுக்கும் வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தை மே 30-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டு திடீரென தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மே 30-ந்தேதி வெளியாக இருந்த எங்கள் ‘கிங்டம்’ படத்தை ஜூலை 4-ந்தேதி வெளியிட உள்ளோம். முன்னர் திட்டமிட்டபடி மே 30-ந்தேதியே படத்தை வெளியிட முயற்சித்தோம்.
ஆனால், சமீபத்தில் நாட்டில் எதிர்பாராத சம்பவங்கள் நடந்தன. தற்போதைய சூழ்நிலையில், படத்தின் புரமோஷன்கள் மற்றும் கொண்டாட்டங்களை நடத்துவது கடினம் என்று கருதி, இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவு ‘கிங்டம்’ படத்தை மேலும் சிறப்பாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
சற்று தாமதமாக வந்தாலும், ‘கிங்டம்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும். ஜூலை 4-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்த படம். உங்கள் அன்பைப் பெறும் என்று நம்புகிறோம். வெளியீட்டு தேதி மாற்றத்திற்கு தங்கள் ஆதரவை அளித்ததற்காக, தில் ராஜு மற்றும் நிதின் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி’ என தெரிவித்துள்ளது.
ஏனெனில், அதே நாளில் நிதினின் ‘தம்பி’படமும் வெளியாகிறது. அதேபோல் தமிழிலும் ஜூலை 4-ந்தேதி சரத்குமார், சித்தார்த் நடித்த 3BHK மற்றும் ராம் இயக்கத்தில் சிவா நடித்துள்ள ‘பறந்து போ’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
கவுதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ படத்தில் தேவரகொண்டா பவர்புல் ரோலில் நடித்திருக்கிறார் பாக்யஸ்ரீ போர்ஸ் ஜோடியாக இணைந்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். தாமதித்து பார்க்கலாம், தாறுமாறு எப்டின்னு.!
