kavin sherin
பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஷெரினுடன் கவின் ரொமான்ஸ் செய்து வருவதற்கான பின்னணி தெரிய வந்துள்ளது.

kavin sherin romance in biggboss show – பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் வெளியேறியபின் சுவாரஸ்யம் குறைந்துவிட்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், ஷெரினுடன் ரொமான்ஸ் செய்து அவரை கவரும் முயற்சியில் கவின் ஈடுபடும் காட்சிகள் நேற்று அதிகமாக காட்டப்பட்டது. அபிராமி, சாக்‌ஷி, லாஸ்லியா என தொடர்ந்து இதை செய்து வந்த கவின் தற்போது ஷெரின் பக்கம் திரும்பியுள்ளார். ஷெரினும் அவரை ரொமாண்டிக் லுக்குடன் பார்த்து வருகிறார்.

லாஸ்லியா, கவின் காதல் என்ன உண்மையான காதலா? கிழித்தெடுத்த சர்ச்சை பிரபலம் – வீடியோ இதோ

லாஸ்லியாவுடன் காதல் ஊத்திக் கொண்டதை அடுத்து சில காரணங்களுக்காகவே கவின் இதை செய்து வருகிறார் என கூறப்படுகிறது. நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக மாற்ற இது பிக்பாஸின் ஐடியாவாக இருக்கலாம் என சிலரும், தன்னை விட்டு விலகியிருக்கும் லாஸ்லியாவை வெறுப்பேற்றவே கவின் இப்படி செய்கிறார் என சிலரும் கூறுகின்றனர். ஏனெனில், உன்னால் என்னை வெறுக்கவும் செய்ய முடியாது. நேசிக்கவும் செய்ய முடியாது என லாஸ்லியா கூறியதை சவாலாக எடுத்துக்கொண்டு கவின் இப்படி செய்கிறார் என சிலர் கூறுகின்றனர்.

kavin sherin

அதேபோல், இப்படி செய்தால் லாஸ்லியாவின் பொசசிவ்னெஸ் தன் மீது திரும்பும் என கவின் கருதுகிறார் என சிலர் கூறுகின்றனர். இதைவிட சுவாரஸ்யமாக, இப்படி செய்தால்தான் லாஸ்லியாவுக்கு தன் மீது இருக்கும் காதல் போய்விடும் என திட்டமிட்டே கவின் இப்படி ஷெரினுக்கு ரூட்டு விட்டு வருகிறார் எனவும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

காரணம் என்னவாக இருந்தாலும் வனிதா வெளியேறிய பின் டல்லடித்த பிக்பாஸ் தற்போது கவின் – ஷெரின் ரொமான்ஸ் காட்சிகளால் சுவாரஸ்யமாக மாறியுள்ளதை மறுக்க முடியாது.