ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ் படத்தை பாராட்டிய முன்னணி படைப்பாளி கார்த்திக் சுப்புராஜ்

“ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” பிரைம் வீடியோ த்ரில்லர் தொடரின் இளம் நடிகர்கள், கதைக்கு நம்பகத்தன்மையையும், ஒரு புதிய ஆற்றலையும் கொண்டு வந்திருப்பதாக, முன்னணி படைப்பாளி கார்த்திக் சுப்புராஜ் பாராட்டியுள்ளார்

karthik subbaraj movie Snakes and Ladders
karthik subbaraj movie Snakes and Ladders

முன்னணி படைப்பாளி கார்த்திக் சுப்புராஜின் பிரைம் வீடியோவின் “ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” சீரிஸை வெகுவாக பாராட்டியுள்ளார். இந்த சீரிஸின் டிரெய்லர் யூடியூப்பில் 10 மில்லியன் பார்வைகளைக் குவித்துள்ளதால், இந்த பிரைம் வீடியோ சீரிஸுக்கான, எதிர்பார்ப்பு பெரும் உச்சத்தில் உள்ளது. ஒன்பது எபிசோட்கள் கொண்ட இந்த சீரிஸ், டார்க் ஹ்யூமர் த்ரில்லர், சஸ்பென்ஸ், மர்மம் மற்றும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் திருப்பங்களுடன் சிலிர்க்க வைக்கும் தொடராக உருவாகியுள்ளது. நவீன் சந்திரா மற்றும் நந்தா தலைமையிலான ஒரு நட்சத்திர நடிகர்கள் குழு இந்த சீரிஸில் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர், இவர்களுடன் புதிய ஆற்றல் மற்றும் துணிச்சலான நடிப்பு திறமை கொண்ட, புத்துணர்ச்சியூட்டும் இளம் நடிகர்கள் குழுவும் உள்ளது. அவர்களின் அழுத்தமான நடிப்பு கதைக்கு உயிரூட்டியுள்ளது.

முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்,நம்பிக்கைக்குரிய இளம் நடிகர்களுடன் பணிபுரிந்த அனுபவம் மற்றும் இந்த சீரிஸ் பற்றி கூறியதாவது…, ஸ்நேக்ஸ் & லேடர்ஸ் தனித்துவமான கதைக்களம் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு அற்புதமான சீரிஸ். மிக அசாதாரண சூழ்நிலைகளில் சிக்கும் சில குழந்தைகளுக்கு ஏற்படும் அனுபவங்கள் தான் இந்த சீரிஸ்.

ஒவ்வொரு திருப்பத்திலும் ஆபத்து பதுங்கியிருக்கும் மிக வித்தியாசமான கதையுடன் உருவாகியிருக்கும், இந்த தமிழ் டார்க் ஹ்யூமர் த்ரில்லர் தொடர், கிளாசிக் கேமை தழுவி உருவாகியுள்ளது. இந்த தொடரில் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றிப் பேசிய கார்த்திக் சுப்பராஜ், இளம் குழுவின் முழு அர்ப்பணிப்பு மற்றும் உற்சாகத்தை வெகுவாக பாராட்டினார், “கேமராக்கள் ரோல் ஆவதற்கு முன்பே குழந்தைகள் தங்கள் பாத்திரங்களாக தயாராகி இருந்தனர், இந்த தொடரில் தங்கள் பாத்திரங்களைப் பற்றி மிகத் தெளிவுடன் தெரிந்து கொண்டு, ஆர்வமாக அர்ப்பணிப்புடன் நடித்தனர். இந்த சீரிஸின் ஒரு பகுதியாக இருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அவர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினர், அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரங்களுக்கு, ஒரு புதிய ஆற்றலையும் நம்பகத்தன்மையையும் கொண்டு வந்தனர், இதனால் கதாபாத்திரங்கள் உணர்வுப்பூர்வமாகவும், உண்மையானதாகவும் இருக்கும்.

karthik subbaraj movie Snakes and Ladders
karthik subbaraj movie Snakes and Ladders

எ ஸ்டோன் பெஞ்ச் புரொடக்‌ஷன் பேனரின் கீழ் கல்யாண் சுப்ரமணியன் தயாரித்துள்ள ஸ்நேக்ஸ் & லேடர்ஸ் சீரிஸை, கமலா அல்கெமிஸ் மற்றும் திவாகர் கமல் உருவாக்கத்தில், அசோக் வீரப்பன், பரத் முரளிதரன் மற்றும் கமலா அல்கெமிஸ் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்தத் தொடரில் நவீன் சந்திராவுடன் நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரிந்தா, ஸ்ரீஜித் ரவி, எம்.எஸ். சம்ரித், எஸ். சூர்யா ராகவேஷ்வர், எஸ். சூர்யகுமார், தருண் யுவராஜ் மற்றும் சாஷா பரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அக்டோபர் 18 முதல், இந்த சீரிஸ், பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாகத் திரையிடப்பட உள்ளது, தமிழில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு, இந்தியாவெங்கும் உள்ள பார்வையாளர்கள் அணுகும் வகையில் திரையிடப்படுகிறது.