அண்ணன் இல்லன்னா தம்பி?: கவுதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி..
‘அண்ணன் இல்லன்னா தம்பி’ என்ற கதையாக, ஒரு கதை ஓகே ஆகியுள்ளது. இக்கதை பற்றிப் பார்ப்போம்..
கார்த்தி நடிப்பில் ‘வா வாத்தியாரே’ திரைப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி உள்ளார். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இதையடுத்து மித்ரன் இயக்கும் ‘சர்தார்-2’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன், ரெஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் என 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
மேலும், ‘டாணாக்காரன்’ பட இயக்குனரின் இயக்கத்திலும் கமிட்டாகி உள்ளார். தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி 2’ படமும் உள்ளது. மாரி செல்வராஜிடமும் கதை கேட்டு அவருக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். இயக்குனர் கெளதம் மேனன், கார்த்தியை சந்தித்து ரொமாண்டிக் கதை ஒன்றை கூறி இருக்கிறார். அது கார்த்திக்கு பிடித்துப் போக அவரும் ஓகே சொல்லிவிட்டார். அதற்கான ஸ்கிரிப்டை தயார் செய்ய சொல்லி உள்ளார் கார்த்தி.
இப்படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு திரைக்கதை எழுதிய ஜெயமோகன் இப்படத்திற்கும் திரைக்கதை மற்றும் வசனம் எழுத உள்ளார் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. முன்னதாக, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சூர்யா நடிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
