கைதி-2 ஒரு கேள்விக்குறி: லோகேஷ் மீது கார்த்தி அதிருப்தி
‘வா வாத்தியார்’ படத்தின் புரமோஷனின்போது கார்த்தியிடம் கைதி-2 படம் எப்போது தொடங்கும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ‘விரைவில்.. விரைவில்’ என்று மட்டும் பதிலளித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ’எனக்கு ஒரே ஒரு அப்டேட் பற்றி மட்டும் தெரியாது. அது ’கைதி 2” என பதிலளித்துள்ளார். இந்தப் பதிலின் மூலம் லோகேஷ் கனகராஜ் மீது கார்த்தி அதிருப்தியில் உள்ளாரோ என நெட்டிசன்ஸ் கருதுகின்றனர். இதனால் மீண்டும் எல்.சி.யூ படங்கள் நடக்குமா, ‘கைதி 2’ தொடங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை லோகேஷ் ழ இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘டிசி’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார். இதன் மூலம் தற்போது ‘கைதி 2’ நடக்க வாய்ப்பில்லை என்பது தெரிகிறது.
பெரும் எதிர்பார்ப்புக்குரிய படம் குறித்து கார்த்தி கூறியுள்ள பதிலால் ரசிகர்களும் அதிருப்தியில் உள்ளனர்.

