‘தக் லைஃப்’ மற்றும் ‘மர்மயோகி’ படங்கள் குறித்து திரிஷா சுவாரஸ்ய தகவல்..
மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இயக்கிய படங்கள் பற்றிய அப்டேட்ஸ் பார்ப்போம்..
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் ஜுன் 5-ந்தேதி வெளியாகிறது. திரிஷா, இந்த பட புரொமோஷனுக்காக ‘சூர்யா45’ படத்துக்கு கொஞ்சம் பிரேக் விட்டு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று வெளியான ‘சுகர் பேபி’ பாடலில் இடுப்பழகால் வசீகரித்து, நளினமாக ஆடிய நிகழ்வு தற்போது வைரலாகி தெறிக்கிறது. தக் லைஃப்’ பட ரோல் பற்றித் தெரிவிக்கையில், ‘நீங்க எல்லாம் ஷாக் ஆவீங்கனு தெரியும். இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது’ என நழுவினார். வெளியான ‘சுகர் பேபி’ பாடல் 2.6 மில்லியன் வியூஸை கடந்து டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கமல்ஹாசன் உடன் இணைந்து திரிஷா நடிக்கவிருந்த முதல் படம் ‘மர்மயோகி. பின்னர் இருவரும் இணைந்து மன்மதன் அம்பு, தூங்காவனம் என நடித்துள்ளனர். தற்போது தக் லைஃப் படத்திலும் கமல்ஹாசனுக்கு இன்னொரு ஜோடி என்பது தெளிவாகி உள்ளது.
இந்நிலையில், மர்மயோகி படம் குறித்தும் திரிஷா தெரிவிக்கையில், ‘அந்த முதல் சந்திப்பை எப்போதும் மறக்க மாட்டேன். எப்படியாவது ‘மர்மயோகி’ பண்ணிடுங்க சார் என கமல் சாரை எப்போ பார்த்தாலும் கேட்பேன். அந்த கதை அப்படி இருக்கும்’ என்றார்.
அந்த படத்துக்காக, சம்மர் கேம்ப் போனது போல கமல் சார் ஆபிஸ், குதிரைப் பயிற்சி என ஏகப்பட்ட ரிகர்சல் பண்ணினோம். கமல் சாருடன் ஜிம்மில் வொர்க் பண்ணிக் கொண்டும், படத்துக்காக ரிகர்சல் பண்ணது எல்லாமே அப்படியே க்ரிஸ்டல் க்ளியராக நினைவில் இருக்கிறது. அந்த படத்தை ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும்’ என ஆவலாய் பேசியுள்ளார் திரிஷா.
