கீர்த்திகா உதயநிதி இயக்கிய ‘காதலிக்க நேரமில்லை’ படம் அப்டேட்
‘வணக்கம் சென்னை’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார் கீர்த்திகா உதயநிதி. தற்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியிருக்கும் திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’.
இத்திரைப்படத்தில் ஜெயம்ரவி நாயகனாக நடிக்க நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க, ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. இப்படம் ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகியிருக்கிறது.
முன்னதாக கீர்த்திகா உதயநிதி தெரிவிக்கையில், நேற்றைய-இன்றைய-நாளைய காதலின் மாற்றங்களை உணர்வுபூர்வமாய் படம் பேசும்’ என்றார்.
இந்நிலையில், ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் முதல் பாடல் `என்னை இழுக்குதடி’ சில வாரங்களுக்கு முன் வெளியானது. ஏ.ஆர். ரகுமான் மற்றும் தீ இணைந்து பாடியுள்ள ‘என்னை இழுக்குதடி’ பாடல் வலைத்தளங்களில் வைரலாகிறது. இதுவரை, இப்பாடல் 10 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது.
கடந்த மே மாதம் ’காதலிக்க நேரமில்லை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதையடுத்து, கேக் வெட்டிக் கொண்டாடினர். தற்போது, இப்படத்தின் வெளியீடுதான் எப்போது? என்ற அறிவிப்பே திரை ஆர்வலர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.