Pushpa 2

நந்தினியுடன் சென்று காய்கறி வாங்கும் சூர்யா, கோபப்பட்ட சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையின் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichi serial promo update 08-12-2024

moondru mudichi serial promo update 08-12-2024

நேற்றைய எபிசோடில் நந்தினி கிட்சனில் வேலை செய்து கொண்டிருக்க மாதவியும் சுரேகாவும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சுந்தரவல்லி உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்த மாதவி நந்தினியை கூப்பிட்டு தலை வலிக்கிற மாதிரி இருக்கு காபி போட்டு கொண்டு வா நாங்க இங்க உட்கார்ந்துகிட்டு இருக்கோம் என்று சொல்லி மூணு காபி சொல்லுகின்றனர். உடனே இன்னைக்கு இவள மாட்டி விட வேண்டியதுதான் என்று சொல்லி புஷ்பா ஓடி வந்து மாதவியிடம் இன்னைக்கு காப்பிலே ஏதாவது கலக்கவா என்று கேட்க நீ ஒன்னும் பண்ண வேண்டாம் போய் உன் வேலையை பாரு என்று சொல்லி அனுப்பி விடுகின்றனர்.

பிறகு நந்தினி கிச்சனில் காபி போட்டுக் கொண்டிருக்க கல்யாணம் உதவி செய்கிறார். நேத்து சொன்னது அம்மா கிட்ட சொல்லிட்டியா அம்மா என்று கல்யாணம் கேட்க அதெல்லாம் வேண்டாமா என்று கல்யாணம் சொல்ல இந்த காபியை கொடுத்துட்டு நான் சொல்ல தான் போகிறேன் என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி காலையிலேயே வந்து உக்காந்து இருக்கீங்க வேலை இல்லையா என்று கேட்க, கோடீஸ்வரி சுந்தரவல்லி ஓட பொண்ணுங்க வேலை செஞ்சா எப்படிம்மா என்று கேட்க அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல உங்க அக்காவுக்கு வீட்டோட மாப்பிள்ளை கிடைச்சுட்டா பிரச்சனை இல்ல ஆனா உனக்கு பாரின்ல போய் படிக்கிறது சிச்சுவேஷன் வந்தால் என்ன பண்ணுவ என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல பாத்துக்கலாமா என்று சொல்லுகிறார்.

நந்தினி சுந்தரவல்லி இடம் காபிமா என்று சொல்லிக் கொடுக்க நான் கேட்கவே இல்லையே, என்று கேட்க மாதவி நாதாமா கொண்டு வரச் சொன்னேன் என்று சொல்லுகிறார். உடனே நந்தினி காபி கப்பை கீழே வைக்க, மாதவி சுரேகாவை கண் காண்பித்து சுந்தரவல்லி வேலை செய்யும் பேப்பரை நந்தினி காபி வைக்கும் இடத்திற்கு பக்கத்தில் வைக்க நந்தினி கவனிக்காமல் காபியை கொட்டி விடுகிறார். உடனே சுந்தரவல்லி உன்னை யார் இதெல்லாம் செய்ய சொல்றது என்ன கத்திவிட்டு சென்றுவிட, மன்னிச்சிடுங்கமா என்று சொல்லி நந்தினி வந்து விடுகிறார்.

நந்தினி வெளியே வர கல்யாணமும் வெளியே வந்து நான் தான் சொன்னேன் இல்லம்மா நல்ல வேல அந்த அம்மா மூஞ்சில ஊத்தாம போயிடுச்சு, உனக்குனே பிரச்சனை தேடிக்கிட்டு வருது மா, என்று சொல்ல அதையேதான் நானும் சொல்றேன் என்று சொல்லுகிறார்.

நான் இவ்வளவு பெரிய வீட்டை பார்த்ததும் கிடையாது நான் குளத்துல வாழுற மீனு வனத்துல வாழ ஆசைப்படக்கூடாது என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சுந்தரவல்லி வேகமாக வெளியே வருகிறார். சுந்தரவல்லி பார்த்தவுடனே நந்தினி வேகமாக வந்து உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்ல, வேகமாக சுந்தரவல்லி இப்படி தான் வேலைக்கு போகும்போது எதிரில் வந்து நிப்பயா தண்ணி எடுத்துட்டு வா என்று சொல்லி குடித்து விடுகிறார். என் முன்னாடி வந்து நிக்காமும் போக சொல்லு. என்று சுந்தரவல்லி சொல்ல சுரேகா தள்ளி நில்லென்று சொன்னவுடன் சுந்தரவல்லி காரில் ஏறி சென்று விடுகிறார். நீ எதுக்கு போய் அம்மாகிட்ட நிக்கிற உனக்கு நான் சொன்னேன் என்று சொல்ல, இல்லமான ஊருக்கு போறேன்னு சொல்ல தான் பார்த்தேன் என்று சொல்லுகிறார். உனக்கு எது வேணும்னாலும் என்கிட்ட சொல்லு என்று மாதவி சொல்லிவிடுகிறார்.

கல்யாணம் காய்கறி வாங்க கிளம்ப, நந்தினி அவரைக் கூப்பிட்டு நான் காய்கறி கடைக்கு போறேன் என்று சொல்ல உனக்கு எதுக்குமா சிரமம் என்று சொல்லுகிறார். இல்லனா வீட்ல இருக்க போர் அடிக்குது மனசு சங்கடமா இருக்கு வெளியே போயிட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று சொல்ல கல்யாணமும் சரி பத்திரமா போயிட்டு வாம்மா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். உடனே சூர்யா மேலே இருந்து வந்தவுடன் நந்தினியை கேட்க, கல்யாணம் கடைக்கு போய் இருக்காங்க என்று சொல்லுகிறார். இப்பதான் கிட்னாப் பண்ணி முடிச்சு இருக்காங்க அதுக்குள்ள எதுக்கு வெளிய அனுப்புன நீ கூட போய் இருக்கலாம் இல்ல என்று திட்ட ரொம்ப தூரம் போயிருக்க மாட்டாங்க ஐயா, நான் போறேன் என்று சொல்ல வேணாம் நான் பாத்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு சூர்யா பைக்கில் நந்தினியை தேடி வருகிறார்.

நந்தினியை பார்த்தவுடன் பைக்கில் வா என்று கூப்பிடுகிறார். நான் பார்த்துக்கிறேன் நீங்க உங்க வேலைய பாருங்க என்று சொல்லுகிறார். எனக்கு வேற வேலை இல்லை என்று சொல்ல உங்களுக்கு தான் ஒரே வேலை குடிக்கிறது அதை போய் பாருங்க என்று சொல்ல அதை நான் பார்த்துப்பேன் நீ உட்காரு என்று சொல்லுகிறார். சுதந்திரமா கடைக்கு கூட போக முடியல என்று சொல்ல, எதுக்கு முனாகிக்கிட்டு இருக்க என்று சூர்யா கேட்கிறார் வாய்விட்டு தான் சொல்ல முடியல முனுக கூட கூடாதா என்று சொல்ல நீ தாராளமா வாய் விட்டதெல்லாம் பேசு இப்பதைக்கு நீ வரத்துக்குள்ள வெஜிடபிள் ஷாப் மூடிட்டே போயிடுவாங்க சீக்கிரம் வா என்று சொல்ல நந்தினியும் வேறு வழி இல்லாமல் சூர்யா வண்டியில் உட்காருகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது

இன்றைய ப்ரோமோவில் நந்தினி என் வாழ்க்கையில படகு மேல தென்றலா வீசுது சூர்யா சாரோட அன்பும் அக்கறையும், அதேசமயம் சூறாவளி காற்று போல சுத்தி சுத்தி அடிக்குது சுந்தரவல்லி அம்மாவோட கோபம்.

சுந்தரவல்லி இடம் நான் வேண்டான்னு தான் சொன்னேன் அவர்தான் வந்தார் என்று சொல்ல,நந்தினி ஓட சூர்யா சென்று வாங்கி வந்த காய்கறிகளை கூடையோடு சுந்தரவல்லி தள்ளிவிட்டு அவனை யாருன்னு நினைச்சா இந்த வீட்டோட இளவரசன் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

moondru mudichi serial promo update 08-12-2024

moondru mudichi serial promo update 08-12-2024