‘லோகோ’ படம் குறித்து, பிரபல இயக்குநர் எச்சரிக்கைக் கருத்து..

Web Ads

நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான படமான லோகோ படம் பற்றிய தகவல்கள் காண்போம்..

உலகளவில் மலையாள திரைப்படமான ‘லோகா: சாப்டர் 1’ மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியை முன்வைத்து முன்னணி இயக்குநரான ஜீத்து ஜோசப் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ‘ஒரு திரைத்துறையில் வேறு வேறு ஜானரில் படங்கள் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் ஒரே ஜானரில் படம் சூப்பர் ஹிட் ஆனது என்றால், அனைவருமே அதே மாதிரி படம் பண்ண ஓடுகிறார்கள்.

இப்போது ‘லோகா’ பெரும் வெற்றியடைந்திருக்கிறது. அடுத்த அபாயம் என்னவென்றால் எல்லாரும் சூப்பர் ஹீரோ படம் பண்ணத் தொடங்கி விடுவார்கள். அது சரியான வழி கிடையாது.

‘லோகா’ போல் ஒரு படம் பெரிய வெற்றி அடைந்த பிறகு, அடுத்த சவால் என்னவென்றால், வேறு ஜானரில் படங்கள் ட்ரை பண்ண வேண்டும். அவையும் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என பார்க்க வேண்டும். நானும் அனைத்து விதமாக படங்களை இயக்கவே விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார் ஜீத்து ஜோசப்.

ஜீத்து ஜோசப்பின் இந்தக் கருத்துகள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு, உண்மையான கருத்து என்று சொல்லப்பட்டு வருகிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அடுத்ததாக ‘மிராஜ்’ என்ற படம் வெளியாகவுள்ளது. தற்போது மோகன்லால் நடிக்கும் ‘த்ரிஷ்யம் 3’ படத்தினை இயக்க தயாராகி வருகிறார் ஜீத்து ஜோசப்.

jeethu joseph reveals the danger of lokah chapter 1 movie
jeethu joseph reveals the danger of lokah chapter 1 movie