ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது.

இந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். பாலிவுட்டின் டாப் ஹீரோவான இவர் தற்போது தமிழில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி விஜய் படங்களை இயக்கி பிரபல இயக்குனரான அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் “ஜவான்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடிகளாக நயன்தாரா மற்றும் தீபிகா படுகோனே நடித்திருக்கின்றனர். மேலும் இப்படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க யோகி பாபு மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘ஜவான்’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. அந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.