ரிலீசுக்கு முன்பே சாதனை படைத்த ஜனநாயகன்.. என்ன விஷயம் தெரியுமா?

ரிலீசுக்கு முன்பே ஜனநாயகன் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
H. வினோத் இயக்கத்திலும்,KVN புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜாஹெக்டே, பாபி தியோல், கௌதம் மேனன், பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை மிகப் பெரிய தொகைக்கு விற்பனையானதாக தகவலும் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தின் மலேசியா திரையரங்க உரிமை 12 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது தமிழ் சினிமாவில் ரெக்கார்ட் பிரேக்கிங் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

