ஜனநாயகன் படத்தில் இணைந்த உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞர்.. சூப்பர் தகவல் இதோ..!

Web Ads

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

jananayagan movie latest update viral

jananayagan movie latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. H வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் இணைந்துள்ள ஒரு உலகப் புகழ் பெற்ற கலைஞர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல ராப் இசைக்கலைஞர் ஹனுமான்கைண்ட், ‘ஜனநாயகன்’ படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடலில் ஹனுமான்கைண்டின் ராப் இடம்பெற்றிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இது குறித்து ஹனுமான்கைண்ட் பேசிய போது , “தளபதி விஜய்க்காக ‘ஜனநாயகன்’ படத்தில் அனிருத் இசையில் ஒரு அட்டகாசமான ராப் பாடலைப் பாடியுள்ளேன். மேலும் பல புதிய புராஜெக்ட்டுகளுக்காக நான் சென்னைக்கு வருவேன். நிறைய சர்ப்ரைஸ்கள் காத்திருக்கின்றன” என்று உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே விஜயின் கடைசி படம் என்பதால் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் தற்போது வெளியான இந்த அப்டேட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரிக்க செய்துள்ளது.

jananayagan movie latest update viral

jananayagan movie latest update viral