அஜித் நடிக்கப் போகும் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா..? வெளியான மாஸ் அப்டேட்..!

Web Ads

அஜித் நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Is this the director of Ajith's next film
Is this the director of Ajith’s next film

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று உள்ளது.

அஜித்தின் தீவிரமான ஃபேன் பாய் ஆன ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.

மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். உலக அளவில் இந்த திரைப்படம் 283 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவலும் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் அஜித்தை வைத்து அடுத்த படம் யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது அது குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித்தின் அடுத்த படம் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Is this the director of Ajith's next film
Is this the director of Ajith’s next film