Indonesia Open 2019 Badminton : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News

Indonesia Open 2019 Badminton :

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து அயா ஒஹோரியை எதிர்கொண்டார். முதல் செட்டை ஒஹோரி 21-11 எனக் கைப்பற்றினா்.

சுதாரித்துக் கொண்ட ஐந்தாம் நிலை வீராங்கனையான பிவி சிந்து 2-வது சுற்றை 21-15 எனவும், 3-வது சுற்றை 21-15 எனவும் கைப்பற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் கென்ட்டா நிஷிமோட்டோவை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் 21-14, 21-13 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் ஸ்ரீகாந்த் தோல்வி!

ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் :

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவைச் செர்ந்த அனிஷ் பன்வாலா 25 மீட்டர் ரேபிட் பையர் பிரிவில் கலந்து கொண்டார்.

584 புள்ளிகளுடன் தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடித்த அனிஷ், இறுதிச் சுற்றில் 29 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

இதேபிரிவில் கலந்து கொண்ட ஆதர்ஷ் சிங் 17 புள்ளிகளுடன் நான்காவது இடத்தையும், கவுசிக் 9 புள்ளிகளுடன் 6-வது இடத்தையும் பிடித்தனர்.

ரஷிய வீரர் 23 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், ஜெர்மனி வீரர் 19 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.