Masters Semifinal Match
Masters Semifinal Match

Masters Semifinal Match – மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் காலிறுதி சுற்றில் ஓகுஹாராவை வீழ்த்தி சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேறினார்.

அதே சமயத்தில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் காலிறுதி சுற்றுக்கு தகுது பெற்றார்.

இந்நிலையில், காலிறுதி சுற்று நடைபெற்றது. மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா ஜப்பானின் நஸோமியை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை சாய்னா 21-18 என முன்னிலை பெற்று இருந்தார்.

தொடர்ந்து நடந்த 2-வது செட்டில் இருவரும் தங்களின் பலத்தை முழுமையாக வெளிக்காட்டினர்.

இதனால், 2-வது செட் விறுவிறுப்பாக இருக்க இருவரும் 4-2, 8-5, 11-9, 14-12, 18-14, 19-19 என புள்ளிகள் எடுத்து இருந்தனர். கடைசி கட்டத்தில் சாய்னா 23-21 என 2-வது செட்டையும் கைபற்றினார்.

அடுத்து, ஆடவர் பிரிவு காலிறுதி சுற்றில் ஸ்ரீகாந்த் கொரிய வீரர் சான் வான் ஹோவை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை 23-21 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினர்.

2-வது சுற்றில் சுதரித்துக்கொண்ட கொரிய வீரர் அடுத்து நடந்த செட்டை கைபற்றினார். இதனால் 1-2 என ஸ்ரீகாந்த் காலிறுதி சுற்றுடன் வெளியேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here