India vs South Africa :

India vs South Africa :  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை சொந்த மண்ணில் ஆடி வருகிறது இந்தியா. தர்மசாலாவில் நடக்கவிருந்த முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

நேரடியாக பைனலுக்கு செல்லும் ஒரு போட்டியாளர் – வெளியானது வீடியோ.!

இப்போது இரண்டாவது போட்டியை வரும் இன்று மொகாலியில் ஆடவுள்ளது. ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இளம் வீரர்கள் இடம்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், திட்டமும் உள்ளதாக ஏற்கெனவே கேப்டன் விராட் கோலி கூறியிருந்தார்.

தோனியின் ஓய்வு குறித்து எந்த தெளிவான தகவலும் இல்லாத நிலையில், 21 வயதான ரிஷப் பன்ட்டுக்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

முதல் டி20 போட்டிக்கு முன்னதாக பேசிய விராட் கோலி, ஆரம்ப காலத்தில் தனக்கு இத்தனை வாய்ப்பு கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார். அதேபோல், இளம் வீரர்களும் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.