இந்திய இராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பதிலடி: ரஜினி, இளையராஜா பாராட்டு..

மே மாதம் 7-ந்தேதி நள்ளிரவு இந்திய ராணுவம், தீவிரவாதிகள் தங்கியுள்ள பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் தனது பதிலடிக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலருக்கும் நாடே பாராட்டுகளை தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து மாநிலங்களவை உறுப்பினர், இசைஞானி இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில், ‘இந்திய ராணுவத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி’ என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே, இந்திய ராணுவத்தின் பதில் தாக்குதலுக்கு, ரஜினிகாந்த், தனது எக்ஸ் பக்கத்தில், ‘போராளிகளின் சண்டை தொடங்கியது. நோக்கம் ஈடேறும்வரை இதை எக்காரணம் கொண்டும் நிறுத்த வேண்டாம். மொத்த நாடும் உங்களுடன் உள்ளது பிரதமர் மோடி. ஜெய் ஹிந்த்’ என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல், நடிகரும் தவெக தலைவருமான விஜய், ‘இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்’ என்று பதிவிட்டுள்ளார். இந்திய ராணுவத்தின் இந்த செயலுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
