‘தளபதி’ பட பாணியில் ‘கூலி’ படத்தில் ரஜினி அறிமுகம்: வைரலாகும் கிளிம்ஸ்..

Web Ads

ரஜினியின் ‘கூலி’ படத் தகவல்கள் காண்போம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் இயக்கிய ‘கூலி’ படம் வருகிற ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாக உள்ளது.

தற்போது இப்படத்திற்காக ஆவலுடன் காத்திருப்பவர்களுக்காக ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. ‘கூலி’ ரிலீசுக்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ளது என்பதை அறிவிக்கும் விதமாக, இந்த ஸ்பெஷல் வீடியோ வெளியாகி உள்ளது. வீடியோவில் ரஜினி உடன் உபேந்திரா, சத்யராஜ், நாகார்ஜுனா ஆகியோர் இடம்பெறும் காட்சிகள் இடம்பெற்று உள்ளது.

இந்தப் புதிய அப்டேட் ரஜினி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்த வீடியோவில் ரஜினியின் ‘ஐகானிக் சீன்’ ஒன்றை ரீகிரியேட் செய்துள்ளனர்.

Web Ad 2

அதாவது ‘தளபதி’ படத்தில் சூரியன் பின்னணியில் இருக்கும்படி ஒரு காட்சி எடுக்கப்பட்டு இருக்கும். அதே காட்சி தற்போது ‘கூலி’ படத்திலும், கிளிம்ப்ஸ் வீடியோவிலும் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்நிகழ்வு வைரலாகி தெறிக்கிறது.

பாலிவுட் நடிகர் அமீர்கானும் கேமியோ ரோலில் நடிக்கிறார். மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார்.

தங்கக் கடத்தலைப் பின்னணியாகக் கொண்ட இப்படத்தில், ரஜினிகாந்த் தேவா என்ற பெயரில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கிறார்.

coolie rajinikanth recreated iconic thalapathy movie scene
coolie rajinikanth recreated iconic thalapathy movie scene