இளையராஜாவின் பயோபிக்; தனுஷ் நடிக்கும் படம் எப்போது உருவாகும்?

Web Ads

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்க விரும்புவதாக ஷங்கர் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த பயோபிக் எப்போது தொடங்கும் என்பது இன்றும் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் இளையராஜாவின் பயோபிக் படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

இசைஞானி இளை​ய​ராஜா​வின் வாழ்க்கை கதை, திரைப்​பட​மாகிறது. இப்​படத்​துக்​கான தொடக்க விழா கடந்த 2024-ம் ஆண்டு சென்​னை​யில் நடந்​தது. கமல்​ஹாசன் உள்​ளிட்ட பிரபலங்​கள் இதில் கலந்து கொண்டனர்.

இளை​ய​ராஜா​வாக தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்​வரன் இயக்​கு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது. தொடக்க விழாவுக்​குப் பிறகு அப்​படம் பற்​றிய எந்த தகவலும் வெளியாக​வில்​லை. தனுஷும் இயக்​குநர் அருண் மாதேஸ்​வரனும் மற்ற படங்​களில் கவனம் செலுத்தி வரு​வ​தால் இளை​ய​ராஜா பயோபிக் கைவிடப்​பட்​ட​தாகச் செய்​தி​கள் வந்தன. அதோடு அருண் மாதேஸ்வரன் இப்​படத்​திலிருந்து வில​கி​விட்​டார் என்​றும் கூறப்​பட்​டது.

இந்​நிலை​யில், இதை மறுத்​துள்ள அருண் மாதேஸ்​வரன் தரப்​பு, தற்​போது லோகேஷ் கனக​ராஜ் கதா​நாயக​னாக நடிக்​கும் ‘டிசி’ படத்தை அவர் இயக்கி வரு​கிறார். அது முடிந்ததும் இளையராஜா பயோபிக்கை தொடங்​கு​வார் என்று தெரி​வித்​துள்​ளது. இதனால், இப்​படம் பற்​றிய அடுத்த அப்​டேட் விரை​வில் வெளி​யாகலாம்​ என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

ilaiyaraaja biobic story act dhanush movie date
ilaiyaraaja biobic story act dhanush movie date