எஸ்.ஜே.சூர்யாவிடம் வருந்தி பேசிய ரஜினிகாந்த்: வைரலாகும் நிகழ்வு..

Web Ads

எஸ்.ஜே.சூர்யாவிடம் வருத்தம் தெரிவித்த ரஜினியின் வார்த்தைகள் காண்போம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘கூலி’ படம் முடித்து ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த இரண்டு படங்கள் மீதும் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர். ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யாவிடம் ரஜினிகாந்த் வருந்தி பேசிய விஷயம் வைரலாகி வருகிறது. அதாவது, எந்த ஒரு வளர்ந்துவரும் கலைஞரும் தன்னுடைய பட விழாக்களுக்கு ரஜினிகாந்த் வர வேண்டும் என விரும்புவார்கள். அவ்வாறு சூர்யாவும் விரும்பியிருக்கிறார்.

ஒருமுறை தன் படம் சம்பந்தமான விழாவுக்கு ரஜினிகாந்த்தை அழைத்துள்ளார். ஆனால் ரஜினியோ, ‘இல்லை சூர்யா நான் எந்த விழாவுக்கும் செல்வதில்லை. இப்போது உங்கள் பட விழாவுக்கு வந்தால் அனைத்துப் பட விழாக்களுக்கும் செல்வதுபோல் ஆகிவிடும். எனவே, என்னால் வர முடியாது’ என கூறியுள்ளார்.

சில நாட்கள் கழித்து எஸ்.ஜே.சூர்யாவுக்கு போன் செய்த ரஜினி, பாக்யராஜும், அவரது மனைவி பூர்ணிமாவும் வந்து, தங்களுடைய மகனின் பட விழாவுக்கு வர வேண்டும் என கேட்டார்கள். நானும் தவிர்க்க முடியாமல் ஓகே சொல்லிவிட்டேன்.

எனவே, அதை நீங்கள் டிவியில் பார்த்து நம்ம விழாவுக்கு வரமாட்டேன் என சொல்லிவிட்டு, இப்போது அங்கு மட்டும் சென்றிருக்கிறாரே என நினைத்துக் கொள்ளாதீர்கள். பாக்யராஜின் பேச்சை என்னால் தட்ட முடியவில்லை’ என வருந்தி பேசிய நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது.

here are unknown throwback incident about rajinikanth
here are unknown throwback incident about rajinikanth