தொட்டுப் பேசுவது எனக்கு பிடிக்காது: நித்யா மேனன் விளக்கம்..
நடிகையாக இருப்பதால் நிகழும் சங்கடங்கள் பற்றி நித்யா தெரிவித்துள்ள தகவல் காண்போம்..
‘திருச்சிற்றம்பலம்’ படத்தை தொடர்ந்து நித்யா மேனன் மீண்டும் தனுஷுடன் ‘இட்லி கடை’ படத்தில் இணைந்துள்ளார்.
விஜய் சேதுபதி உடன் ‘தலைவன் தலைவி’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ‘இப்படத்தின் டிரெய்லரில் நித்யா மேனனும் விஜய் சேதுபதியும் பேசும் வசனத்தை பலரும் ரீ கிரியேட் செய்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவர் நடிகைகள் படும் கஷ்டங்கள் குறித்து பேசிய நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. அவர் தெரிவிக்கையில், ‘ஒரு சாதாரண பெண்ணிடம் நடந்து கொள்வதுபோல கூட நடிகைகளிடம் யாரும் நடந்து கொள்வதில்லை. நாங்கள் நடிகைகள் என்பதற்காகவே அனைவரும் எளிதாக எங்களை தொடலாம் என நினைக்கிறார்கள்.
ஒரு நிகழ்ச்சிக்கு போனால், ரசிகர்கள் கையை குடுங்க என கேட்கிறார்கள். ஆனால், இந்த கேள்வியை சாதாரண பெண்ணிடம் யாரும் கேட்க மாட்டார்கள். ஒரு நடிகையை எளிதாக தொடலாம் என்கிற எண்ணம்தான் பலரிடமும் இருக்கிறது.
பொதுவாக தொட்டுப் பேசுவது எனக்கு பிடிக்காது. யாராவது என்னிடம் கை கொடுக்க கேட்டால், நான் அதை மறுத்து இருக்கிறேன். இதை, வலைதளங்களில் பெரிய பிரச்சினையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு யாருக்கு கை கொடுக்க வேண்டும் என தோன்றுகிறதோ, அவர்களுக்குத்தான் நான் கை கொடுக்க முடியும்’ என்றார். தற்போது நித்யா மேனனின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
