GVM Short Film Secret
GVM Short Film Secret

கௌதம் மேனன் கார்த்தி டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் சிம்பு நடித்து இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து கூற மறுத்து உள்ளார்.

GVM Short Film Secret : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். ஊரடங்கு உத்தரவு காலத்தால் இவர் தற்போது கார்த்தி டயல் செய்த எண் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த குறும் படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. அந்த டீசரில் லீசா மட்டுமே இருந்தார். வின்னைத்தாண்டி வருவாயா படத்தின் இசையில் கார்த்திக் என்ற பெயருடன் அந்த குறும்படம் உருவாகியிருப்பதை டீசர் அம்பலப்படுத்தியது.

இப்படி எல்லாம் ஹிட் கொடுத்த STR எங்கே போனார்? சிம்புவின் நடிப்பால் பாராட்டப்பட்ட டாப் 5 படங்கள் – லிஸ்ட் இதோ.!

இதனால் ரசிகர்கள் இதைத் தாண்டி வருவாயா பார்ட்-2 உருவாகியிருப்பதை ஏன் கவுதம் மேனன் குறும்படம் மூலமாக மறைமுகமாக தெரிவிக்கிறார் என கொண்டாடி வந்தனர்.

இதில் சிம்பு நடித்து இருக்கிறாரா இல்லையா என பலரும் தொடர்ந்து கேள்வி கேட்டு வந்தனர். ஆனால் கௌதம் மேனன் தொடர்ந்து இது குறித்து பேச மறுத்து வருகிறார்.

அவர் இது குறித்து பேசாமல் சஸ்பென்ஸ் வைத்து வருவதால் நிச்சயம் சிம்பு நடித்து இருப்பார் என அவரது ரசிகர்கள் உற்சாக பட்டுக் கொள்கின்றனர்.

ஆனால் குறும் படம் வெளியானால் தான் அது சிம்பு இருக்காரா இல்லையா என்பது குறித்த விவரங்கள் தெரியவரும். சிம்பு நடித்து இருந்தால் நிச்சயம் அது அவரது ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.