GVM About Simbu Memes
GVM About Simbu Memes

இதெல்லாம் நடக்கும்னு ஏற்கனவே சிம்பு சொல்லிவிட்டார் என கார்த்திக் டயல் செய்த எண் மீம்ஸ் குறித்து கௌதம் மேனன் பேசியுள்ளார்.

GVM About Simbu Memes : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் மேனன். இவரது இயக்கத்தில் சிம்பு மற்றும் திரிஷா ஆகியோர் நடித்திருந்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

தனிமையில் நான் செய்வதெல்லாம் இது ஒன்னே ஒன்னு தான் – ஸ்ருதிஹாசன் வெளியிட்ட வீடியோவை பாருங்க!

ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது.

அதன் முன்னோட்டமாக கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும் படம் வெளியாகியிருந்தது. வில்லியான ஓரிரு நாளில் வெளியே மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைப் பெற்ற இந்த குறும்படம் கேலி கிண்டல்களுக்கு உள்ளாகி வருகிறது.

அதிலும் குறிப்பாக சிம்பு எனக்கு மூன்றாவது குழந்தை என இதைச் சொன்னது பெரிய அளவில் கிண்டல் அடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பல மீம்ஸ்கள் இணையத்தில் உலா வருகின்றன.

தற்போது இந்த மீம்ஸ் குறித்து கௌதம் மேனன் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். சிம்பு என்னை குழந்தை என சொல்வதை நிச்சயம் எல்லாரும் கலாய்ப்பார்கள். இது பற்றி நிறைய மீம்ஸ் வரும் எனக் கூறினார்.

உலக அளவில் வசூலை அள்ளிய டாப் 5 படங்கள் என்னென்ன? முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா?? – வசூல் விவரத்துடனான‌ லிஸ்ட் இதோ!

அவர் கூறியபடியே நடந்தது. ஆனால் நான் இதையெல்லாம் பார்ப்பதில்லை. நான் யாரையும் என்னால் காதலிக்கு போன் செய்யுங்கள் என கூறவில்லை. எல்லாமே அவருடைய கண்ணோட்டத்திலும் கட்டுப்பாட்டிலும் தான் உள்ளது.

இதனை கள்ளத்தொடர்பு நினைத்தால் அது கள்ள தொடர்பாக தான் தெரியும். நான் கார்த்தியின் உறுதியான காதலை காட்டினேன். அவனை கையால ஜெஸ்ஸிக்கு தான் தெரியும் என கூறியுள்ளார்.