gv prakash update for amaran movie
gv prakash update for amaran movie

அமரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் ஜி.வி பிரகாஷ்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மறைந்த இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் முகுந்தன் என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் சாய்பல்லவி, சுரேஷ் சக்கரவர்த்தி,ஸ்ரீ குமார் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக இந்த படம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலீஸுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஜி.வி பிரகாஷ் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார் அதில் இந்த படத்தின் முதல் சிங்கிளான “ஏய் மின்னலே” என்ற பாடல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.