goat movie ott release update
goat movie ott release update

வேட்டையன் படத்துடன் கோட் மோத உள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

த. செ ஞானவேல் இயக்கத்திலும், லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் ஐந்தாம் தேதி தளபதி விஜய் நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.5000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியான இந்தப் படம் உலக அளவில் 440 கோடி தாண்டி உள்ளது.

இந்நிலையில் கோட் படம் OTT யில் அக்டோபர் 10ஆம் தேதி netflix தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் வேட்டையன் படமும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.