யார் யாரை மறைமுகமாக சாடுகிறார் ஜி.வி.பிரகாஷ்?

Web Ads

பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து, ஒரு மகளுக்கு தந்தையான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் திடீரென அவரை பிரிவதாக அறிவித்தார். சைந்தவியும் அதனையே அறிவித்தார் என்பது தெரிந்ததே. இதற்கு நடிகை திவ்யபாரதிதான் காரணம் எனவும் தகவல் வெளியாகி, பின்னர் மறுக்கப்பட்டது.

நடிகராகவும் முத்திரை பதித்து வரும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது ‘பிளாக்மெயில்’ படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அவர் தெரிவித்த தகவல் வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Web Ad 2

‘நான் நிறைய பேருக்கு உதவி செய்வேன். அவர்களில் சிலர் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள். அப்போது எனக்கு, ‘ஏன் இப்படி செய்தார்கள். இப்படி ஏமாற்றாமல் இருந்திருந்தால், அந்த உதவி சரியான நபர்களுக்கு சென்று சேர்ந்திருக்குமே.

இப்படி செய்ததால் என்ன பலன். அவர்களைத்தானே பாதிக்கப்போகிறது என தோன்றும். ஏமாற்றங்களை சந்தித்தாலும், நான் எனது கேரக்டரை மாற்றிக் கொள்ளமாட்டேன்’ என பேசியிருக்கிறார். அவ்வகையில், ஜி.வி.பிரகாஷ் யார் யாரை மறைமுகமாக தாக்கிப் பேசியிருக்கிறாரா? அவர் மனதுக்கே தெரியும்.

gv prakash latest interview about betrayel here are details
gv prakash latest interview about betrayel here are details