
‘பராசக்தி’ படத்தில் மூன்று பாடல்கள் ஹிட்டாகும்: ஜி.வி.பிரகாஷ் உறுதி
எஸ்கே நடிக்கும் 25-வது படமான ‘பராசக்தி’ குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறிய அப்டேட்ஸ் பார்ப்போம்..
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ‘பராசக்தி’ என்ற பெயர் வைக்கப்பட்டு, டைட்டில் டீசரும் வெளியானது.
பீரியட் காலத்தில் நடக்கும் கதைக்களத்தை உருவாக்க இருக்கிறார் சுதா. இப்படத்தில் வில்லனாக ரவிமோகன் மற்றும் அதர்வா முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.
மாணவர்களை ஒன்று திரட்டி போராடும் கதையாக இருக்குமோ என டீசர் பார்க்கும்போது தோன்றுகிறது. அதுமட்டுமின்றி படத்தின் மையக்கரு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இருக்கும் எனவும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
இந்நிலையில், படத்தின் டைட்டில் டீசரில் ஜி.வி.பிரகாஷ் கவனம் ஈர்த்துள்ளார். அதாவது, பின்னணி இசையை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.
முன்னதாக சுதா கொங்கரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்துக்காக ஜி.வி. பிரகாஷ் தேசிய விருது வாங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச்சூழலில் பராசக்தி படம் குறித்து பேசிய ஜிவி பிரகாஷ், ‘பராசக்தி படத்துக்காக ஏற்கனவே நான்கு பாடல்களை உருவாக்கி விட்டேன். சுதா கொங்கராவுக்கு ரொம்பவே தனித்துவமான இசை ரசனை இருக்கிறது. இந்த நான்கு பாடல்களுமே சூப்பராக வந்திருக்கின்றன.
கண்டிப்பாக இந்த நான்கு பாடல்களில் மூன்று பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்றார்.