முதலமைச்சர் விஜய்க்கு சிறப்பு மரியாதை!

Web Ads

தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை கௌரவிக்கும் விதமாக, சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் உருவாக்கிய பிரமாண்ட சிற்பக் கண்காட்சி, நடிகர் சஞ்சீவ் மற்றும் சென்னைஸ் அமிர்தா கல்விக்குழுமங்களின் நிறுவனர் திரு. பூமிநாதன் முன்னிலையில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முதலமைச்சர் விஜய்யின் திரைப்பயணம் முதல் அரசியல் பயணம் வரை பல்வேறு முக்கிய தருணங்கள் காய்கறி மற்றும் பழங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பங்களாக காட்சிப்படுத்தப்பட்டன.

முதலமைச்சர் விஜய் கதாநாயகனாக அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படம் முதல் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரை அவரது பயணத்தை பிரதிபலிக்கும் வகையில் மொத்தம் 69 சிற்பங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த கலைப்பணிகளை சென்னைஸ் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் 10 நாட்கள் கடின உழைப்பின் மூலம் உருவாக்கியுள்ளனர்.

சிற்பங்களை பார்வையிட்ட நடிகர் சஞ்சீவ், மாணவர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டியதுடன், இத்தகைய புதுமையான முயற்சிகளுக்கு வாய்ப்பு வழங்கி வரும் சென்னைஸ் அமிர்தா கல்விக்குழுமங்களின் நிறுவனர் திரு. பூமிநாதனுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. பூமிநாதன், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ஏவியேஷன் துறைகளில் தரமான கல்வி வழங்கி, சர்வதேச நிறுவனங்களில் மாணவர்களை வெற்றிகரமாக பணியமர்த்துவதில் தங்கள் நிறுவனம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறினார். மேலும், மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் இத்தகைய நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய்க்கு மரியாதை செலுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, அவரது சாதனைகளை கொண்டாடியதோடு மட்டுமல்லாமல், சென்னைஸ் அமிர்தா மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் திறமையையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.