அஜித் நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ பட டிரைலர் எப்போது?
ரசிகர்களுக்கான ஸ்பெஷலாக உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ பட அப்டேட் பற்றிப் பார்ப்போம்..
‘தல’ அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து, ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாக உள்ளது.
அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் உருவாக்கியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்பட டீசரில் அஜித் பல கெட்அப்புகளில் தோன்றி தெறிக்கவிடுகிறார். அஜித் மாஸாக இருப்பதாகவும் வரவேற்பு பெற்றது. இப்படம் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டீசரை தொடர்ந்து, தற்போது இப்படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக கேட்டு வருகின்றனர்.
அவ்வகையில் இப்படத்தை வாங்கியிருக்கும் விநியோகஸ்தர் ராகுல் தனது சோஷியல் மீடியா பக்கத்தில், “கடந்த மாதம் கடைசியில் டீசர். அப்போ, இந்த மாசம் புக்கிங் ஓபன் பண்ணிடலாமா” என பதிவிட்டிருந்தார். இந்த மாதம் புக்கிங் ஓபன் செய்யப்படும் என்றால், அப்போது இப்படத்தின் டிரைலரும் வெளியாகும் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.
குறிப்பாக, விடாமுயற்சி படத்தின் கதைக்களம் வேறு. ஆனால் ‘குட் பேக் அக்லி’ படத்தின் கதைக்களமோ ‘தாறுமாறு’ என்பதால் இப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
