குட் பேட் அக்லி : OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வெளியான தரமான அப்டேட்..!

Web Ads

குட் பேட் அக்லி படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Good Bad Ugly  Do you know when the OTT release date is
Good Bad Ugly Do you know when the OTT release date is

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மேலும் த்ரிஷா,சுனில், அர்ஜுன் தாஸ்,பிரசன்னா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில், இந்த படம் வெளியாகி உலக அளவில் 238 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளில் எவ்வளவு வரவேற்பு கொடுத்தார்களோ அதே அளவிற்கு ஓடிடியிலும் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த திரைப்படம் வருகிற மே மாதம் எட்டாம் தேதி netflix ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Good Bad Ugly  Do you know when the OTT release date is
Good Bad Ugly Do you know when the OTT release date is