இது வேற லெவல் மூவி: வெற்றிமாறன் கதை தர, கௌதம் மேனன் இயக்க, ஹீரோவாக சிம்பு
வேற லெவலாய் தெறிக்கும் கெமிஸ்ட்ரியில் சிம்பு நடிக்கவிருக்கிறார். இது குறித்த திரைக்கலையின் விவரம் காண்போம்..
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோவாகி, இயக்குனராகி, பாட்டெழுதி பாடி என சகல திறமைகளின் சங்கமமாக உலா வருபவர் சிம்பு.
இவர் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் தற்போது ‘தக் லைஃப்’ திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசனின் மகனாக சிம்பு நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படம் வருகிற 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது.
அடுத்ததாக, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வரலாற்றுக் கதையம்சம் கொண்ட படத்திலும், ‘ஓ மை கடவுளே’ பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் சிம்பு. அப்படத்திற்காக விண்டேஜ் லுக் மற்றும் ஸ்டைலுக்கு மாறியுள்ள சிம்பு, அண்மையில் அதன் போஸ்டரையும் வெளியிட்டிருந்தார்.
தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தை இயக்கி வரும் அஸ்வத் மாரிமுத்து, அப்படத்தை முடித்த பின்னர் சிம்பு படத்தின் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், நடிகர் சிம்புவின் மற்றொரு படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இதில், ஸ்பெஷல் என்னவென்றால்..
இயக்குனர் வெற்றிமாறனிடம் கதையை வாங்கி, சிம்புவுக்கு பொருந்தும் வகையில் மாற்றி வேற லெவலில் இயக்கவிருக்கிறார். இப்படத்தை முன்னதாக, சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை தயாரித்த ஐசரி கணேஷ் தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாக கோலிவுட் தெரிவிக்கிறது.
இவ்வகையில், வருகிற 2025-ம் ஆண்டு சிம்புவுக்கு மிகச் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்வான்ஸ் வாழ்த்துகள், அப்டியே.. கல்யாணப் பத்திரிகையையும் மீடியாவுக்கு கொடுத்துடுங்க.!