மீண்டும் ஹாலிவுட் படத்தில் தனுஷ்: ஹீரோயின் யார் தெரியுமா?
ஹாலிவுட் சினியில் நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக ஒரு குட்டி பால்நிலா நடிக்கவிருக்கிறது. அது குறித்து கண்குளிர பார்ப்போம் வாங்க..
பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘இட்லி கடை’ என இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இவர், தமிழ் மட்டுமில்லாமல், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். இதனால், இவருக்கு இந்தியாவை கடந்து, உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர்.
அந்நிலையில், தனுஷ் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகிர்’ படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து, ஆண்டனி மற்றும் ஜோ ரூஸ்ஸோ இயக்கிய ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்தார்.
இச்சூழலில், மீண்டும் தனுஷ் ஹாலிவுட்டில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, சோனி புரொடக்சன்ஸ் தயாரிக்கும் ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில், சமீபத்தில் ஹாரர் கதைக்களத்தில் வெளியான ‘இம்மாகுலேட்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ‘ஸ்வீட் மூன்’ சிட்னி ஸ்வீனி தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தெரிகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரிவாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக வெளியாகி உள்ள தகவல், ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
இத்தகைய குஷியோடு, தனுஷுடன் ஜோடி சேரும் சிட்னிக்கு, நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்க கோரியும் அழைப்பு விடுத்து வருகின்றனர். நல்ல அழைப்பு, தமிழ்த்திரை வானில் பால்நிலா உலாவ ரசிப்போம்.!