சான்பிரான்சிஸ்கோ சென்ற கமல்ஹாசன், ஏஐ தொழில்நுட்ப அதிகாரியுடன் உரையாடல்

கடலுக்கு கரையுண்டு, கலைக்கு ஏது கரை. அவ்வகையில், ஏஜ கற்க சென்ற கமல் பற்றிய தகவல்கள் காண்போம்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் தனது 234-வது படமாக ‘தக் லைப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனை தொடர்ந்து கமலின் 237-வது படத்தை சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்க உள்ளனர்.

முன்னதாக, கமல்ஹாசன் ஏஐ தொழில்நுட்பம் கற்க, அமெரிக்கா சென்றிருந்தார். மேலும் லாஸ் வேகாசில் நடந்த சினிமா தொடர்பான ஒரு கண்காட்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலானது.

இந்நிலையில், தற்போது, சான் பிரான்சிஸ்கோ சென்ற கமல், பெர்ப்ளெக்ஸிட்டி ஏ.ஐ தலைமை செயல் அதிகாரி அரவிந்த் ஶ்ரீனிவாஸை சந்தித்து பேசியிருக்கிறார். அரவிந்த் இந்தியாவை சேர்ந்தவர் ஆவார்.

இது குறித்து கமல் வெளியிட்டுள்ள பதிவில், ‘சினிமாவிலிருந்து சிலிக்கான் வரை, கருவிகள் பரிணமித்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால், அடுத்தடுத்து என்னவென்று நமது தாகம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பெர்ப்ளெக்ஸிட்டி தலைமையகத்திற்கு நான் சென்றது உத்வேகம் அளித்தது. அங்கு அரவிந்த் ஶ்ரீனிவாஸை சந்தித்தேன். அவரின் திறன்மிக்க குழுவினர் எதிர்காலத்தை உருவாக்குகின்றனர்’ என குறிப்பிட்டு, புகைப்படங்களையும் பதிவிட்டிருக்கிறார்.

பெர்ப்ளெக்ஸிட்டியின் ஏஐ தலைமை செயல் அதிகாரி அரவிந்த் ஶ்ரீனிவாஸ் வெளியிட்டுள்ள பதிவில், ‘உங்களை பெர்ப்ளெக்ஸிட்டி அலுவலகத்தில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இன்னும் கற்கவும், திரைப்படத் தயாரிப்பில் முன்னணி தொழில்நுட்பத்தை கொண்டு வருவதற்காகவும் நீங்கள் காட்டும் ஆர்வம் உத்வேகம் அளிக்கிறது. தக் லைப் மற்றும் நீங்கள் பணியாற்றும் எதிர்கால திட்டங்களுக்கு வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

from cinema to silicon the tools evolve kamal haasan