‘ஜெயிலர்-2’ படத்தில், மகனை கொன்றதை மனைவியிடம் சொன்னாரா ரஜினி?
‘ஜெயிலர்-2’ பட ஷுட்டிங்கில் ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார். இது குறித்துக் காண்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, இதன் 2-ம் பாகத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தற்போது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார். இது தொடர்பாக ஷுட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, படையப்பா வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளதை குறிப்பிட்டு ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் முதல் நாள் என பதிவிட்டுள்ளார்.
முதல் பாகத்தில் முத்துவேல் பாண்டியனின் மனைவியாக நடித்திருந்தார் ரம்யா, தற்போது 2-ம் பாகத்திலும் இணைந்துள்ளார். அதேபோல் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னாவும் பங்கேற்றுள்ளார்.
முதல் பாகத்தின் க்ளைமேக்ஸில் ரஜினி தனது மகனை சுட்டுக் கொன்ற நிலையில் 2-ம் பாகத்தில் தன் மனைவி, மருமகளிடம் இது பற்றி சொல்வதும், அதற்கு அவர்களின் ரியாக்சன் என்னவாக இருக்கும்? இதனை தொடர்ந்து என்ன நிகழ்கிறது? என்பதை 2-ம் பாகத்தின் கதை ஆக்சனாக விவரிக்கும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே ரஜினி நடித்துள்ள ‘கூலி’ பட ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக்சன் படைப்பாக உருவாகி வரும் இப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாகிறது.