கீர்த்தி சுரேஷ்க்கு விடிஞ்சா கல்யாணம்; ரசிகர்கள் அக்கறையோடு அறிவுரை..
நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு விடிஞ்சா கல்யாணம். இவருக்கு, மிக அக்கறையோடு ரசிகர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இது குறித்துப் பார்ப்போம்..
நடிகை கீர்த்தி சுரேஷும், ஆண்டனி தட்டிலும் 15 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், நாளை கோவாவில் திருமணம் நடக்கிறது.
குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், தான் நடித்திருக்கும் ‘பேபி ஜான்’ பட ட்ரெய்லருக்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு குறித்து, இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
மேலும், பேபி ஜான் டிரெய்லரை பார்த்துவிட்டு ஃபயர்விட்ட மாளவிகா மோகனன், ஹன்சிகா உள்ளிட்ட பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்தும் ஸ்டோரி போட்டிருக்கிறார். அதை பார்த்த ரசிகர்களோ, நாளைக்கு கல்யாணத்த வச்சுக்கிட்டு இன்னைக்கு பேபி ஜான் பட ப்ரொமோஷன் வேலையை பார்த்துக்கிட்டு இருக்கீங்களேமா.
கல்யாணப் பொண்ணு செய்ற வேலையா இது?. கட்டில் மீது படுத்துக்கிட்டு கனா காணுங்கள் கீர்த்தி சுரேஷ். பட ப்ரொமோஷனை பின்னர் பார்த்துக் கொள்ளலாம். இன்ஸ்டாவில் ஸ்டோரி போடுவதை நிறுத்துங்கள்.
கோவாவில் உங்களுடன் இருக்கும் ஆட்களுடன் பேசி மகிழுங்கள்’ என ரசிகர்கள் அக்கறையோடு அறிவுரை வழங்கியுள்ளனர்.
பேபி ஜான் படத்தின் தயாரிப்பாளர் அட்லி தான். ஜவான் எனும் சூப்பர் ஹிட் படம் கொடுத்து பாலிவுட்டின் கவனத்தையும் ஈர்த்தவர் தயாரித்திருக்கும் படம் என்பதால் பேபி ஜான் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
நயன்தாராவுக்கு ‘ஜவான்’ படம் எப்படி பெயர் வாங்கிக் கொடுத்ததோ, அதே போன்று கீர்த்திக்கு பேபி ஜான் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்றம், மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிதான காதல் மனசுக்கு, கல்யாண வாழ்த்தையும் சொல்லிடுவோம்.!