குணசேகரனுக்கு எதிராக திரும்பி உள்ளார் கதிர். 

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. 

இந்த வீடியோவில் கரிகாலன் ஜான்சி ராணியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து போலீஸ் அடி வெளுத்தெடுத்து விசாரித்துக் கொண்டிருக்க குணசேகரன் என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று சத்தம் போட பொண்ணை காணும்ல அதான் விசாரிச்சிட்டு இருக்கோம் என போலிஸ் சொல்ல அந்த ஜீவானந்தம் தான் என் பொண்ணு கடத்தி இருப்பான் அவனை பிடிச்சு சாரிங்க என சொல்கிறார். 

பிறகு ஜனனி சாரு பாலாவுக்கு போன் செய்து தர்ஷினியை காணவில்லை குணசேகரன் சார் நம்பர் இருந்தால் கொடுங்கள் என விசாரிக்கிறார். 

கரிகாலன், ஜான்சி ராணியை வெளியே கொண்டு வரும் குணசேகரன் என் பொண்ணு உனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தேன் என்று சொல்ல கதிர் அவ சின்ன பொண்ணு கல்யாணம் பண்ணி கொடுக்கறேன்னு சொல்றீங்க தப்புணே இது என எதிர்த்து பேசுகிறார். என்னடா மாத்தி மாத்தி பேசிட்டு இருக்க என கதிரை பார்த்து கேள்வி கேட்கிறார். இத்துடன் இன்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.