Enai Noki Paayum Thota
Enai Noki Paayum Thota

Enai Noki Paayum Thota : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் படையை உருவாக்கி வைத்திருக்கும் வெகுசில இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன்.

கடைசி ஒன்பது ஆண்டுகளில் இவருடைய படங்கள் நான்கு மட்டுமே வெளியாகி இருந்தாலும் இவருடைய படத்துக்காக ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது.

முடிவுக்கு வந்த கௌதம் மேனன் படம் – ரிலீஸ் தேதியும் வெளியானது!

இந்நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் இவருடைய எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பாடல்கள் யூ டியூபில் இருந்து திடீரென நீக்கப்பட்டுவிட்டது.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் டிராப்பாகி விட்டது என்பது போன்ற வதந்திகளையும் பரப்பினர்.

இதுகுறித்து விசாரித்தபோது தனியார் ஆடியோ நிறுவனத்துக்கு இப்படத்தின் ஆடியோ உரிமத்தை விற்க தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருவதாகவும்,

அதனால் ஒன்றாகா நிறுவனத்தின், யூடியூப் சேனலிலிருந்த, இப்படத்தின் வீடியோக்களை பிரைவேட் மோடில் மாற்றியுள்ளனர் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

மேலும் அடுத்த மாதம் படம் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.