குபேரா படத்தில் தனுசுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?
குபேரா படத்தில் தனுஷுக்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது
மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்த நிலையில், படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் தனுசுக்கு பதிலாக இந்த படத்தில் முதலில் விஜய் தேவர கொண்டாவை இயக்குனர் சேகர் கமுலா அனுகியுள்ளார். ஆனால் விஜய் தேவர் கொண்டா பிச்சைக்காரன் ஆக நடிக்கும் மறுத்துவிட்டதாகவும் நான் அப்படி நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் கூறி இருக்கிறார்.
அவருக்கு பதிலாக தான் தனுஷிடம் கதை சொல்லியதாக கூறப்படுகிறது இந்த படத்தில் விஜய் தேவர் கொண்டா நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
