சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், சத்ய சாயிபாபாவின் வாழ்க்கை வரலாறு..

Web Ads

கமல்ஹாசன் நடிப்பில் ‘சத்யா’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுரேஷ் கிருஷ்ணா. இதனைத் தொடர்ந்து ஆளவந்தான், ரஜினியின் ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’ பாபா உள்பட பல படங்களை இயக்கி தனித்த முத்திரை பதித்தார். இந்தி, தெலுங்கிலும் படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இப்போது புட்டபர்த்தி சத்ய சாய் பாபாவின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து ‘அனந்தா’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜெகபதி பாபு, சுகாசினி மணிரத்னம், ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, ஸ்ரீ ரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு பா.விஜய் பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதியுள்ளார். இன்னர்வியூ நிறுவனம் சார்பில் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிக்கும் இப்படத்துக்கு தேவா இசை அமைத்திருக்கிறார்.
சஞ்சய் ஒளிப்பதிவு செய்கிறார்.

எதார்த்தம், உணர்ச்சி, தெய்வீக ஆற்றல் ஆகியவற்றுடன் ஐந்து கதைகள் இப்படத்தில் சொல்லப்படுகிறது. சத்ய சாயி பாபாவின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு, நவம்பர் 23-ந்தேதி முதல் டிஜிட்டல் தளத்தில் வெளியாக உள்ளது.

director suresh krishna directs antha biopic of sathya sai baba
director suresh krishna directs antha biopic of sathya sai baba