நடிகை கவுரி கிஷனுக்கு, இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு..

Web Ads

‘ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்’ என்பதுபோல பேசும் வார்த்தையில் கவனம் முக்கியம். அதுவும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இது குறித்து மேலும் விழிப்புணர்வு தேவை. அவ்வகையில் இதோ ஒரு நிகழ்வு..

‘96’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை கவுரி கிஷன். தற்போது, இவரது நடிப்பில் ‘அதர்ஸ்’ என்ற படம் திரையரங்குகளில் ரிலீஸாகி உள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

அப்போது, தனது உடல் எடை என்ன என அநாகரிகமாக கேள்வி எழுப்பிய யூடியூபர் ஒருவரிடம், கவுரி கிஷன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Web Ad 2

இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், ‘நிருபரின் செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்; அவை ஏற்றுக்கொள்ள முடியாத, வெட்கக்கேடானவை.

பெண் நடிகர்கள் இன்னும் இந்த அநாகரிகமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பது, தமிழ் சினிமா இன்னும் செல்லவேண்டிய தூரம் எவ்வளவு என்பதைக் காட்டுகிறது’ என பதிவிட்டுள்ளார். தற்போது பா.ரஞ்சித் தெரிவித்துள்ள இந்த கருத்து வைரலாகி வருகின்றது.

director pa ranjith supports actress gouri kishan
director pa ranjith supports actress gouri kishan