விஜய் பேசிய ‘அங்கிள்’ என்ற வார்த்தை குறித்து, கே.எஸ்.ரவிக்குமார் கருத்து..

Web Ads

மதுரை மாநாட்டில் விஜய் பேசும்போது, முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள் என குறிப்பிட்டு பேசினார். இதற்கு பலவாறு விமர்சனங்கள் எழுந்தன.

இது குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவிக்கையில், ‘விஜய் பேசியது எனக்கு தவறாகப்படவில்லை. ஏனெனில், அவர் நேரில் பார்க்கும்போது கூட ‘குட்மார்னிங் அங்கிள், வணக்கம் அங்கிள், எப்படி இருக்கீங்க அங்கிள்?’ என்று தான் சொல்வார். அதை இன்று பொதுவெளியில் சொல்லியிருக்கிறார். அதற்கு வேறு ஒரு அர்த்தம் கற்பித்து, ஒரு தரப்பு வேறு மாதிரி பேசிக் கொண்டிருக்கிறது.

Web Ad 2

நானே ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு இரண்டு படங்கள் செய்திருக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு நிறைய முறை போயிருக்கிறேன். பலமுறை அவரை சந்தித்திருக்கிறேன். நானும் அவரிடம் ‘வணக்கம் அங்கிள்’ என்றுதான் சொல்வேன். அது தப்பான வார்த்தை கிடையாது. அதுமட்டுமின்றி, அங்கு இருந்தது அனைத்துமே அவருடைய கூட்டம். அவர்களை மகிழ்விக்க விஜய் அப்படி பேசியிருக்கலாம். அப்படித்தான் நான் நினைக்கிறேன்’ என தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் கடந்த 21-ந்தேதி நடந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரை வந்தனர். இதில் பேசிய விஜய் ‘ஸ்டாலின் அங்கிள் இட்ஸ் வெரி ராங் அங்கிள்’ என்று பேசியது வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

director ks ravikumar supports vijay
director ks ravikumar supports vijay