சல்மான்கான் குடும்பத்தார் விநாயகர் சதுர்த்தி வழிபாடு: வைரலாகும் விமர்சனங்கள்..

Web Ads

பாலிவுட் நடிகர் சல்மான்கான் குடும்பத்தார் வேறு மதத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்திருக்கிறார்கள். அவர் வீட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை வலைதளத்தில் வெளியிட்டார் சல்மான் கான்.

விநாயகர் சிலைக்கு சல்மான்கான், அவரின் அப்பா சலிம்கான், அம்மா சல்மா ஆகியோர் ஆரத்தி எடுத்தார்கள். அந்த வீடியோவை பார்த்த சிலர் வரவேற்றுள்ளனர்.

அவர்கள் கூறியிருப்பதாவது, இதுதான் எங்கள் இந்தியா. இஸ்லாமியர்கள் கூட இந்து பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள். நன்றி சல்மான்கான் என தெரிவித்தார்கள்.

அதே சமயம் சிலரோ, சல்மான்கான் மற்றும் அவரின் குடும்பத்தாரை விளாசியிருக்கிறார்கள்.
ஒரு முஸ்லீம் எப்படி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடலாம்?. சல்மான்கான் மீதான மரியாதையே போய்விட்டது. நீங்கள் எல்லாம் இஸ்லாமியரே கிடையாது, காஃபிர் என்கிறார்கள்.

ஷாருக்கானின் மனைவி கௌரி இந்து மதத்தை சேர்ந்தவர். அவர்களின் பிள்ளைகளான ஆர்யன், சுஹானா, ஆப்ராம் ஆகியோர் தங்களுக்கு பிடித்த மதத்தை பின்பற்ற முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள்.

அமீர்கானின் வாழ்வில் வந்த இரண்டு மனைவிகளும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தான். மேலும், தற்போது அவர் காதலிக்கும் கௌரி ஸ்பிராட்டும் ஒரு இந்து.

சயிஃப் அலிகானின் மகளும், நடிகையுமான சாரா அலிகான் அவ்வப்போது கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அவருக்கு அது பிடித்திருக்கிறது. ஆனால், அவர் ஒவ்வொரு முறை கோவிலுக்கு செல்லும்போதும், நீங்கள் இஸ்லாத்தை சேர்ந்த பெண்ணா எனவும் விமர்சிக்கிறார்கள்.

actor salman khan for celebrating ganesh chaturthi
actor salman khan for celebrating ganesh chaturthi