அஜித்துக்கு வில்லனாக விக்ரம் பிரபு?: ஆதிக் ரவிச்சந்திரன் சொல்வாரா?
அஜித்தின் அடுத்த படத்தில் வில்லனாக விக்ரம் பிரபு நடிக்கிறாரா? என்பது பற்றிப் பார்ப்போம்..
விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குனர் சண்முகப் பிரியன் உருவாக்கியுள்ள படம் லவ் மேரேஜ். இப்படத்தில், சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.
படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசும்போது,
‘நம் நண்பர்கள், உறவினர்கள் யாராவது காதலித்திருப்பார்கள் அல்லது காதலித்துக் கொண்டிருப்பார்கள். காதல் என்பது திருமணம் வரை செல்லக்கூடியது தான். இதனால், இந்தப் படத்துக்கு, டைட்டிலே மிகப்பெரிய வெற்றியைத் தரும். விக்ரம் பிரபு கடினமாக உழைக்கக் கூடிய நடிகர்.
பக்கத்து வீட்டுப் பையனாக இந்தப் படத்தில் அவர் நடித்திருக்கிறார். இதற்காகவே மிகப்பெரிய வெற்றியைப் பெறும். பரிசோதனை முயற்சியாக, அவர் நிறைய படங்களில் நடித்து வருகிறார். அவர் வில்லனாகவும் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.
இது குறித்து இணையவாசிகள், அப்படியென்றால் அடுத்து நீங்கள் மீண்டும் ‘தல’ அஜித்தை வைத்து இயக்கும் படத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் பட்சத்தில் விக்ரம் பிரபு வில்லனாக வாய்ப்பா?’ என கேட்டு வருகின்றனர்.