தேவயானியின் அப்பாவித்தனம் பிடித்திருந்தது: இயக்குனர் சாய் கணேஷ் சுவாரஸ்ய தகவல்
இயக்குனர் சாய் கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 3 BHK படம் வரும் ஜூலை 4-ந்தேதி ரிலீஸாகிறது. படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தெரிவிக்கையில்,
‘இந்த படத்தில் தேவயானி மேடம் நடிக்க வைக்க காரணம். அம்மா கதாபாத்திரத்திற்கு யார் என யோசிக்கும்போது, எனக்கு உடனே தோன்றியது தேவயானி மேடம் மட்டும் தான். அதன் பின்னர் வேறு யாருமே எனக்கு தோன்றவில்லை.
காரணம் தேவயானி மேடம் இடம் இருக்கும் அப்பாவித்தனம் மிகவும் முக்கியமான காரணம். 3 BHK படத்தின் மூலம் எனது 8 தோட்டாக்கள் படத்தில் கிடைத்த ரசிகர்களை மீண்டும் சம்பாதித்து விட வேண்டும் என்பதுதான். ரசிகர்களுக்கு இந்த படம் மிகவும் மனதில் ஒன்றிப் போக கூடிய படமாக ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகும் என நம்புகிறேன்.
எல்லா கால கட்டங்களிலும் ரசிகர்கள் நல்ல படங்களுக்கு அவர்களின் ஆதரவை கொடுத்துக் கொண்டே இருந்துள்ளார்கள். இடைப்பட்ட காலத்தில் அதிகப்படியான ஆக்ஷன் படங்களே வந்துகொண்டு இருந்ததால், மக்களுக்கு ஒரே மாதிரியான படங்களே வந்துகொண்டு இருந்ததாக தோன்றியிருக்கலாம்.
‘குட் நைட்’ மிகவும் முக்கியமான படம். நாமும் இந்த மாதிரி படம் எடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கும்போதுதான் அந்த படம் வெளியானது. குட்நைட் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு எனக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்தது.
லோகேஷ் கனகராஜையும் என்னையும் ஒப்பிடுபவர்களுக்கு நான் பொதுவாக பதில் அளிப்பதில்லை. அவர்களுக்கு பல விஷயங்கள் தெரிவதில்லை. நானும் லோகேஷ் கனகராஜும் அதே நட்புடன் தான் இருக்கிறோம். லோகேஷின் உயரத்தை நான் என்னவாக நினைக்கிறேன் என்பதுதான் முக்கியம்.
லோகேஷ் பெரிய படங்கள் பண்ணுகிறார் என நான் அவரைப் பார்த்து பொறாமைப் பட்டதில்லை. அது பொறாமையாக மாறினால் தவறாக மாறிவிடும். லோகேஷ் கனகராஜின் உயரத்தை நான் உத்வேகமாக பார்க்கிறேன்.
இது போன்ற படங்கள் பண்ணும்போதுதான் லோகேஷ் கனகராஜ் தனக்கென தனி சினிமா உலகத்தை திரைப்படவியலை உருவாக்கியுள்ளார்,. நாமும் அதுபோல நமக்கென தனி திரைப்படவியலை உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன்.
இயக்குநராக மிகவும் முக்கியமான விஷயம் நாம் ஒரு படம் பண்ணுவதில்லை. மாறாக, நமக்கென தனி பாணி திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான்.
நான் இன்னும் அதிக படங்கள் பண்ணவேண்டும் என்று நினைக்கிறேன். வெற்றி தோல்வி என்ற பதத்தையே பயன்படுத்தக் கூடாது என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பின்பற்றி வருகிறேன்.
ஒரு படம் பண்ணும்போது அந்த படத்தின் மூலம் நாம் ஒரு உயரத்தை எட்ட நினைக்கிறோம். அதை அடைந்தோமா இல்லையா என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, வணிக ரீதியான வெற்றி, தோல்வி, வசூல் இவை எல்லாமே கூடுதலாக நமக்கு கிடைப்பது. 3 BHK படத்தை மக்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும் படமாக மாற்ற வேண்டும் என்பதில் மட்டும் தான் கவனம் செலுத்தி வருகிறேன்’ என கூறியுள்ளார். பட்ட அனுபவம் நின்று வெல்லும் தானே.!