சென்னையில் இருக்க பயந்தேன்: நடிகை ரம்யா கிருஷ்ணன் ப்ளாஷ் பேக்
ரம்யாவின் ரம்மிய நினைவலைகள் காண்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஏற்றிருந்த நீலாம்பரி கதாபாத்திரம் மறக்க முடியாதது. ரஜினி என்ற பெரிய ஆளுமைக்கு வில்லியாக நடித்து அசத்தியிருந்தார்.
ரஜினியேகூட அந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பை பார்த்து வியந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை அவரே பல மேடைகளில் கூறியும் இருக்கிறார்.
படையப்பா படத்தில் நடித்ததிலிருந்து ரம்யா கிருஷ்ணனுக்கு நீலாம்பரி கதாபாத்திரம் ஒரு அடையாளமாகவே மாறிவிட்டது எனலாம். மேலும், ரம்யா கிருஷ்ணனை இந்தியா முழுவதும் கொண்டு போய் சேர்த்த படம் பாகுபலி. ராஜமாதா என்ற கதாபாத்திரத்தை ஏற்று தனது குரலாலும், நடிப்பாலும் அனைவரையும் ஈர்த்தார்.
இந்நிலையில், ரம்யா கிருஷ்ணன் தெரிவித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. ‘படையப்பா படத்தில் எனக்கு சாய்ஸ் மட்டும் இருந்திருந்தால் கண்டிப்பாக சௌந்தர்யா செய்திருந்த ரோலைத்தான் செய்திருப்பேன். ஏனெனில், ரஜினிக்கு வில்லியாக நடிப்பதற்கு ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.
படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட் செய்யும் போதெல்லாம் ஸ்பாட்டில் இருந்தவர்கள் நீங்கள் கொஞ்ச நாட்கள் சென்னைக்கு வராமல் இருங்கள் என்று சொன்னார்கள். அதேபோல், ரிலீஸின்போது நான் சென்னையில் இல்லை’ என்றார். 73 வயதிலும் கூலி, ஜெயிலர்-2 என கலக்கி வரும் ரஜினி சார் மாஸ் அளப்பரிய ஆற்றல்தானே.!