ஸ்லோவாக்கியாவில் நடைபெற்ற இளையோர் உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா துருக்கி வீரரிடம் தோற்றதால் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
86 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தீபக் புனியா, துருக்கியின் ஆரிப் ஓசோனுடன் மோதினார். 1 – 2 என்ற கணக்கில் தோற்ற புனியா வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.