டிடி ரிட்டன்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம். இவரது நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் டிடி ரிட்டன்ஸ்.

தில்லுக்கு துட்டு படங்களின் அடுத்த பாகமாக வெளியாகி உள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மதியம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் திரைப்படம் சிரிப்பலையை உருவாக்கி வருவதாக பலரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது இந்த படம் முதல் நாளில் மட்டும் ரூபாய் 2.8 கோடி வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தானத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்திருப்பதாக அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.