நான் கமல் ரசிகன் என சொல்லித்தான், லோகேஷ் என்னிடம் கதையே சொன்னார்: ரஜினி பேச்சு, வைரல்..

‘கூலி’ படத்தின் ஷுட் முடிந்து டப்பிங் நிறைவு செய்தபிறகு என்னுடைய உதவி இயக்குனர்களிடம் பேசிய ரஜினி சார், ‘என்னிடம் கதை சொல்லும்போது லோகேஷ் கனகராஜ், நான் ஒரு கமல் ரசிகன் என்று சொல்லித்தான் கதையே சொன்னார். கூலி ஆடியோ லாஞ்சுல வைத்து அவரை பார்த்துக்கிறேன்’ என விளையாட்டாக கூறியதாக இயக்குனர் லோகேஷ் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள இந்த தகவல் வைரலாகி வருகிறது.
மேலும், லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில், ‘கமல் ரசிகராக இருந்து ரஜினி சாருக்கு படம் பண்ணும்போது, கூடுதல் இருக்க வேண்டும். அவ்வகையில், நான் கமல் சாரிடம் சென்று ‘உங்கள் நண்பர் ரஜினியை வைத்து உங்களுடைய ரசிகன் படம் இயக்கப்போவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேட்டதற்கு, ‘என் நண்பருடைய படத்தை என்னுடைய ரசிகர் இயக்குவது எனக்கு பெருமைதான். அதை சிறப்பாக செய்துவிட்டு என்னிடம் வாங்க’ என்றார்.
இந்நிலையில், முன்னதாக வெளியான ‘லியோ’ படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் கமலின் வாய்ஸ் இடம்பெற்றிருந்ததை போன்று, ‘கூலி’ படத்திலும் கமல் பேசவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் உண்மையாக இருந்தால், திரையரங்கில் செம விசில் பறக்கும்.
பான் இந்திய அளவில் இப்படத்தை வியாபாரம் செய்யும் நோக்கில், பல மொழிகளை சார்ந்த பிரபலங்களை இப்படத்தில் நடிக்க வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அவ்வகையில், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாகீர் மற்றும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
இதனிடையில் அனிருத் இசையில் வெளியான சிக்கிடு, மோனிகா, பவர்ஹவுஸ் உள்ளிட்ட பாடல்கள் தற்போது டிரெண்டிங்கில் கலக்கி கொண்டிருக்கிறது. வரும் 14-நதேதி ‘கூலி’ ரிலீசாகவுள்ள நிலையில், இப்படத்தின் ஆடியோ லான்ச்சை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.
