Web Ads

ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு, குக் வித் கோமாளி பிரபலம் ஹேப்பி..!

ரஜினி படத்தில் நடித்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக குக் வித் கோமாளி பிரபலம் தெரிவித்துள்ளார்.

cook with comali monisha join coolie movie

cook with comali monisha join coolie movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு பிரபலமான மோனிஷாவிற்கு கூலி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அவர் நடித்து வருகிறாராம்.

ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

cook with comali monisha join coolie movie

cook with comali monisha join coolie movie